மது பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை

10 May 2021

மது பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை  செய்ய முயன்ற நபர்களை கைது செய்த தென்காசி காவல்துறையினர்

தென்காசி, மே.10
முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அதிகமாக மது பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை  செய்ய முயன்ற நபர்களை கைது செய்தனர் தென்காசி காவல்துறையினர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இன்று 10ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தி இருப்பதால் 8 மற்றும் 9ம் தேதிகளில் முழு ஊரடங்கு தளர்வினை தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் நேற்று மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தென்காசி கடைவீதிகளில் குவிந்தனர்‌.
மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இந்நிலையில் தென்காசி நகர்ப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் கற்பகராஜ், மாரியப்பன் மற்றும் தனிப் பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், குற்றப்பிரிவு காவலர்கள் கார்த்திக், வடிவேல் முருகன், சௌந்தர், பாலசுப்பிரமணியன், சேர்மராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது
 இன்று முதல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அதிகமாக மது பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை  செய்ய முயன்ற ஆயிரப்பேரி,  சாம்பவர்வடகரை, பாட்டா குறிச்சி, குற்றாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நபர்களை  கைது செய்து தென்காசி காவல்துறையினர் அவர்களிடமிருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

செய்தியாளர்
மா.சி.மனோகர்
தென்காசி மாவட்டம்