தாராபுரம் ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ பாதங்கஅரு சாமி கீர்த்தனை

23 February 2021

தாராபுரம் ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ  பாதங்கஅரு சாமி கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீ பாதாராஜ  தீர்த்த  சுவாமிகள் அருளிய  மத்வநாம சங்கீர்தன  உபன்யாசம் ப்ரவசணம் நிகழ்ச்சி தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோவில் உள்ள உத்திராகி மடம் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓசூர் பி.டி. வேணுகோபால ஆச்சார் மற்றும் பி.டி.த்வய்பாயன ஆச்சார் ஆகியோர் கலந்து கொண்டு 
வாயுஸ்திதி ஹோம்  நிகழ்ச்சி நடத்தினர் இதில்  பாதாராஜ  தீர்த்த  சுவாமிகள் சிஷ்யர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆராதனை செய்தனர் இதனை தொடர்ந்து மடத்தில் உள்ள அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஆச்சாரியார் ஹரி கூறுகையில், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து இந்த உலகைக் காக்கவும், நாட்டில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் விவசாயத்திற்கு நல்ல மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டியும், எல்லோரும் நலமுடன் வாழ வேண்டியும் 500 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 
ஸ்ரீமத்வாச்சார்ய முல மஹா சம்ய்தாணம் 1008 ஸ்ரீ சத்ய ஆத்மா தீர்த்த ஸ்ரீ  பாதங்கஅரு சாமி நினைவாக இவர்களது சிஷ்யப் பிள்ளைகள் இன்று கீர்த்தனை நிகழ்ச்சி நடத்தினோம் என அவர் தெரிவித்தார்.


பேட்டி: ஹரி ஆச்சாரிய