தமிழக காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரிக்கு தமாகா நெசவாளர் அணி மாநில தலைவர் எம்.ராஜேஷ் கண்டனம்!

11 May 2021

தமிழக காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரிக்கு தமாகா நெசவாளர் அணி மாநில தலைவர் எம்.ராஜேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில தலைவர் எம்.ராஜேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது., தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம், கர்ம வீரர் காமராஜரையே தோற்கடித்த அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரியும், தமாகா அரசியல் ரீதியாக தேர்தலில் தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால் தன்மானத்துடன் அரசியல் நேர்மையை கடைபிடித்து வருகிறது, உங்களைப்போல் வேட்பாளர் தேர்வில் பணம் பெற்றுக் கொண்டு சீட் வழங்கிய இயக்கம் அல்ல எங்கள் தமாகா இயக்கம், இந்நிலையில் ஏதோ தேர்தல் தோல்வி ஏற்பட்டதால் சிறிது மன சங்கடம், வருத்தத்தில் இருக்கும் தமாகா சொந்தங்களை வலை வீசி பிடித்திட வசீகர வார்த்தைகளுடன் அழைப்பு தந்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், உழைப்பவர்களை மதிக்க தெரியாத காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரமாட்டோம்...
நீங்கள் அழைப்பு விடுத்ததால் சில கேள்விகள் உங்களுக்கு...
தமாகாவில் இருந்து காங்கிரஸில் சேர்ந்தவர்கள் அடைந்த பயனை பட்டியல் இட்டீர்கள் என்றால் நல்லது மதிப்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்., கரூரில் காங்கிரஸின் நிலை என்ன? அதை விடுங்கள் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து சிறப்பாக செயல்பட்ட ( திரு.பேங்க் சுப்ரமணியன்) மாவட்ட தலைவரின் தற்போதைய நிலை என்ன? அவரின் உழைப்புக்கு அங்கீகாரம் முதலில் கட்சி தந்த தா? உங்கள் MP தந்தாரா?
நீங்கள் (காங்கிரஸ் தலைவர்கள் ) பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்தார்கள் என்று கரூர் MP குற்றம் சாட்டினாரே அதற்க்கு உங்கள் பதில் என்ன ? மெளனம் சம்மதத்திற்க்கு அறிகுறியா? அவர் யாரை குறிப்பிட்டார், உங்களை யா அல்லது வேறு யாரை ?

அவர் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அதற்க்கு மறுப்பு தெரிவித்து உங்கள் மரியாதையை அதாவது , மாநில தலைவர் மதிப்பை காப்பாற்றினீர்களா? அதை முதலில் செய்யுங்கள் சார், எங்களை அரசியல் ரீதியாக வளர்த்து பயன் பெறச் செய்யும் வழியை எங்கள் தலைவர் மக்கள் தளபதி ஐயா GK.வாசன் அவர்கள் பார்த்து கொள்வார்... நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களையும், ஏன் கரூர் MP யாக இருக்கும் ஜோதிமணிக்கு அரசியல் முகவரி தந்து "ஒன்றிய கவுன்சிலர் "பதவியை பெறக் காரணமாக இருந்து முதலில் அரசியல் முகவரி தந்தது தமாகா என்பதை மறந்து விட வேண்டாம்... மக்கள் தலைவர் வழியில் மக்கள் தளபதி காட்டும் பாதையில் நாங்கள் பயணிப்போம்... அது எங்களுக்கு தெரியும், ஆடு நனைகிறதே என ஒநாய் அழுத கதை போல் எங்களை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்
மீண்டும் தமாகா உறவுகளை சீண்டினால் என்னிடம் இருந்து முதலாக கண்டனம் மட்டுமல்ல வசவும் வட்டியாக உங்களுக்கு வந்து சேரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணியின் மாநில தலைவர் எம்.ராஜேஷ் எச்சரித்துள்ளார்.