தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு கூட்டம்

21 January 2022

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கள்ளக்குறிச்சி சிபிஐ மாவட்ட  அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் மாவட்ட வெங்கடேசன் நடந்து முடிந்த வேலை அறிக்கை முன்வைத்தும் கீழ்க்கண்ட தீர்மானங்களை விளக்கி பேசினார்

கூட்டத்தை துவக்கி வைத்து சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் அப்பாவு உரையாற்றினார்
கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கலியபெருமாள வாழ்த்திபேசினார்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், மாயவன், நந்த கோபால கிருஷ்ணன், மஞ்சப்பன், சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவு 1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பஞ்சமி நிலங்கள் நேற்று மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

முடிவு 2
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஒடுக்கப்பட்ட பிரிவினரான பழங்குடியினர் இருளர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா துரிதமாக வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வருவாய்த்துறையினர் உரியவர்களுக்கு குடும்ப அட்டை ஆதார் அட்டை இல்லை என்பதால் மறுக்கப்படுகிறது எனவே அவர்கள் குடியிருப்பு பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவு 3
ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு மக்களின் பிள்ளைகள் கல்வி பயில உரிய காலத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை அதற்காக ஆலைகழி ப்பு தொடர்கிறது உடனடியாக அவர்களுக்கு கல்வி சான்றிதழ் பெற சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

முடிவு 4
மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் பாலியல் வன்புணர்ச்சிகள் வன்கொடுமைகள் இவைகளின் மீது காவல்துறை உண்மைக்குப் புறம்பாக செயல்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டத்தின்படி அவர்களுக்கு நியாயம் வழங்க மறுத்து வருவது தொடர்கதையாக நிகழ்கிறது இதுகுறித்து மாவட்ட காவல் துறை மாவட்ட ஆட்சியர் துரிதமாக நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கவழிகாட்ட வேண்டும்.

முடிவு 5 
மேற்கண்ட முடிவுகளை தீர்மானமாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வருகின்ற 31ம் தேதி கொடுக்கப்படும் என்றும் அதன் மீது தொடர் இயக்கங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்.