சுயநலம் கொண்ட இந்த சமுதாயத்தில் இப்படி ஒரு நபரா ஆச்சரிய படுத்திய செயல்

17 October 2020

கர்நாடக மாநிலம் காரேகௌடனஹள்ளி எனும் தும்கூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச்சேர்ந்த ஹரீஷ் கவுடா (வயது26) தன் விதவை தாய்க்கு ராகி அறுவடையில் உதவிசெய்துவிட்டு தான் பணிபுரியும் பெங்களூருக்கு திரும்பும் வழியில் 16 பெப்ரவரி 201 லாரி ஒன்றினால் விபத்திற்கு உள்ளாகினார்.

அந்த மோதலில் உடல் இருபாகங்களாக சிதைவடைய அருகிலுள்ள tollgate ஆம்புலன்சினால் வழிபாதுகாப்பு காவலர்களால் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

ஏற்றிச்செல்லும் வழியில் மரணம் நிச்சயம் என அறிந்த அந்த வாலிபர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் அவர் தெறியப்படுத்திய கடைசி வார்த்தை ஃ"தன் உடல் உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட வேண்டும்" என்பதே.

உயிருக்கு போராடும் வேளையிலும் அவரின் அந்த ஓர் உயரிய சிந்தனை பலரின் மனதினை தொட்டது மாத்திரமல்ல அவரை கௌரவப்படுத்தும் விதத்தில் 13ம் தினம் அவர் கிராமத்தை சேர்ந்த 180 பேர்(102 பெண்கள் 71ஆண்கள் அதிலடங்கும்) தங்கள் மரணத்திற்கு பிறகு கண்தானமளிக்க முன்வந்தனர்.

 

பெங்களூர் நாராயனா நேத்ராலையா ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஹரிஸ் கவுடாவின் இரு கண்களில் ஒன்று அவர் ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் மற்றதுவடகர்நாடகாவவைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

தான் செய்த தன்நலமற்ற ஒரு செயலால் பிறருக்கு பயனாக இருந்த இவ்வுலக சாதனையாளர்கள் பட்டியலில் இதோ இந்த ஏழை கிராம வாசி மனதை கொள்ளையடித்துச் சென்றார். சுயநலம் கொண்டு வாழும் இந்த சமுதாயத்திற்கு ஹரிஸ் கவுடாவின் அரிய செயல் ஆச்சரியத்தை மட்டுமல்ல மனிதனான ஒவ்வொரு இதயங்களிலும் உயிர் மூச்சாக "வாழ்கையென்றால் என்ன" என பேசுகிறது.