மாணவர்கள் மதிப்பெண் சான்று 24 -ம் தேதி முதல் பெறலாம்

23 June 2022

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.இந்நிலையில்,கடந்த 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால்,தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 24 -ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்,பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடக்க உள்ளது.அதுகுறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி