சாத்தூரில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய கடைவீதிகள்...

10 May 2021


சாத்தூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலைகள் மற்றும் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இதனையடுத்து தமிழக அரசு மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய கடைகளான காய்கறி, பலசரக்கு கடைகள் மற்றும் பால், மருந்து கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்தது.

 மேலும் பஸ் கார் வேன் ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதித்திருந்த நிலையில் இன்று தொடங்கிய இந்த முழு ஊரடங்கு மதியம் 12 மணிக்குப் பின் கடைகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் சாத்தூர் பகுதிகளில் சாலைகள் மற்றும் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

 மிகவும் அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்குராந்தல் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.