சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை தமிழக அரசுக்கு மருது சேனை கோரிக்கை

28 October 2020

சிவகங்கை மாவட்டத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வென்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருது சேனை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது . மதுரையில் மருது சேனை இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஆதிநாராயணன் அளித்த பேட்டி .

தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று தென்மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக அகமுடையார் சமுதாயத்தினர் போராடி வருகின்றோம் , எங்களுக்கு அரசியல் ரீதியாக எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை .

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழகம் முழுவதும் 20 சதவீதம் அகமுடையார் சமுதாயத்தினர் இருப்பதாக தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம் . எனவே தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தில் , மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் .

மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அகமுடையார் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தமிழக சட்ட சபை தேர்தலில் அகமுடையார் சமுதாயத்தினரை வேட்பாளராக அறிவிக்கின்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக முடிவெடுத்துள்ளோம் .

அதையும் மீறி அரசியல் கட்சிகள் கள்ளர் , மறவர் ஆகியோரை வேட்பாளராக அறிவித்தால் அவர்களை 100 சதவீதம் தோற்கடிக்கின்ற செயலில் மருது சேனை இயக்கம் தேர்தல் களத்தில் இறங்கி செயல்படும் . எனவே திமுக , அதிமுக மற்றும் அரசியல் கட்சிகள் அகமுடையார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார் .

பேட்டியின்போது பொதுச்செயலாளர் கிருஷ்ணன் , உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் யோகநாதன் , நகர் மாவட்டச் செயலாளர் சக்திவேல் , புறநகர் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர் .