வாய் புண் குணமாக எளிய இயற்கை வீட்டு வைத்தியம்:

02 September 2020

◆அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். 

◆சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள். 

◆வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

◆வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். 

◆வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும். 

◆கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவையாக புண் இருந்த இடத்தில் பூசி வந்தாலும் வாய்ப்புண் குணமாகும்.

◆அகத்தி இலைகளை சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டாலும் வயிற்றில் உள்ள புண்கள் குணமாவதுடன் வாய்புண்ணும் குணமாகி விடும். 

◆அகத்தி இலையை பால் சொதி, குழம்பு போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். 

◆வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும் வாய் புண்ணும் குணமாகும். 

◆நெல்லிக்காயும் கூட வாய்ப்புண்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.