பழுதான ரயிலை கைகளால் தள்ள வைத்த அவலம்.

30 August 2021

நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், பேருந்து போன்றவற்றை பொதுமக்கள் தங்களது கைகளால் தள்ளிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

 

 

 

 

 

ஹர்தா என்ற இடத்தில், ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை ரயில்வே ஊழியர்கள், அங்குள்ள பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் கைகளால் தள்ளிச் சென்றனர். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளவைத்த ரயில்வே அதிகாரிகளின் செயல் மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.