வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் விற்றுத் தீர்ந்தது

30 November 2022

நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் நாய் சேகர்ரிட்டர்ன்ஸ்.கோலிவுட்டின் காமெடி கிங்காக இருந்துவந்த வடிவேலு தவிர்க்க முடியாதகாரணங்களால் சில காலம் சினிமாவில் நடிப்பதை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்நடிகர் வடிவேலு நடிகர் வடிவேலு கோலிவுட்டின் காமெடி கிங்காக வலம் வந்தார். துவக்கத்தில் என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்த வடிவேலு, தொடர்ந்து ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் நடித்தவர் சில காலங்கள் நடிப்பதில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டார். இந்நிலையில் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் வடிவேலு பாடியுள்ள அடுத்தடுத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. முதலில் அப்பத்தா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பணக்காரன் என்றபாடலும் வெளியானது.