சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு!!

23 July 2021


சூர்யா நடித்திவரும் ’எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.


சூர்யா 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது. இந்த டீசரில் சூர்யா கையில் வால் ஏந்தி காட்சியளக்கிறார். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு படத்தில் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’படம் மாபெறும் வெற்றியை கைப்பற்றியது. அந்த படத்திற்காக சூர்யா தன்னையே மாற்றிக்கொண்டார்.

மேலும் படத்தில் அவர் வெளிக்காட்டிய நடிப்பு பெறும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பாக சூர்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. சூரரைப் போற்று திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மையில் கல்லாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் படம் ’எதற்கும் துணிந்தவன்’. இது சூர்யாவின் 40 வது படமாகும். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இயக்குநர் பாண்டிராஜ் படத்தை இயக்குகிறார்.