கர்நாடகாவில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

06 September 2021

கர்நாடகாவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த மாதம் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. தற்போது 2ஆவது கட்டமாக நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன. 50% மாணாக்கர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.