50 லட்சம் பரிசுத் தொகையுடன் பல லட்சம் சம்பளத்தை அள்ளிய ராஜு பாய்

17 January 2022

விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 தற்போது முடிவடைந்துள்ளது.

நேற்று ஒளிபரப்பான கிராண்ட் ஃபினாலே வில் மக்களிடம் அதிக வாக்குகளை பெற்று நடிகர் ராஜு அந்த டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ராஜு நாம்இருவர்நமக்குஇருவர் 2 என்ற சீரியலில் கத்தி என்ற கேரக்டரில் நடித்தார். அந்த ஒரு கேரக்டர் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதன் மூலம் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத அளவுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று இன்று நிகழ்ச்சியின் வெற்றியாளராக மகுடம் சூடி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய நகைச்சுவை குணமும், இயல்பான நடவடிக்கையும் தான்.மேலும் இறுதிப் போட்டிக்கு ராஜு, பவானி ரெட்டி, பிரியங்கா, அமீர், நிரூப் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் ராஜு இந்த பிக்பாஸ் டைட்டிலை வென்றது அவருடைய ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பவானி ரெட்டியும் பெற்றனர்.இதில் ராஜுவுக்கு பிக்பாஸ் டைட்டிலோடு சேர்த்து 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது. இதுதவிர பிக்பாஸ் வீட்டில் 16 வாரங்கள் இருந்த ராஜுவுக்கு அதிகபட்ச சம்பளமும் கிடைத்துள்ளது.அதாவது ராஜுவுக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. இந்த வகையில் 16 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு இருபத்தி ஒரு லட்சம் சம்பளம் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் பரிசு தொகை 50 லட்சம் மற்றும் அவருடைய சம்பளமும் சேர்த்து 71 லட்சம் ராஜுவுக்கு கிடைத்துள்ளது. ரசிகர்களின் உள்ளங்களோடு சேர்த்து பல லட்சம் பணத்தையும் சம்பாதித்துள்ள ராஜுவுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.