தேனியில் சி.ஐ.டி.யூ.ஆர்பாட்டம்

23 July 2021


தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகிக்க தமிழ்நாடு ஏஐடியுசி துணைத் தலைவர் சுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ தளவாட உற்பத்தியை தனியாருக்கு கொடுப்பதை எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை ஒடுக்க அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மின்சார திருத்த சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்வதை கண்டித்தும் தேச நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதன் காரணமாக இதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, எல் பி எஃப், ஏஐயுடியுசி, டியூசிஐ,
ஏ ஐ டி யுசிசி, ஏ ஏ எல் எல் எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ரவி முருகன் எல்பி எஃப் மாவட்ட கவுன்சில் செயலாளர் முருகன் மாவட்ட கவுன்சில் செயலாளர் முருகன் ஏஐயுடியுசி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி ஏஐடியுசி சிநகரச் செயலாளர் அன்பழகன் ஏஏஎல் எல்எஃப் துணைச் செயலாளர் தமிழன் டியுசிஐ மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பினர்.