உளுந்தூர்பேட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு - பாராட்டு விழா.

22 June 2022

உளுந்தூர்பேட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு - பாராட்டு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில்,    பாளையப்பட்டு பாரம்பரிய  சிலம்பப் பயிற்சி மையம் சார்பில், தமிழர்களின்  பாரம்பரிய சிலம்ப வீரக்கலையை  ஊக்கப்படுத்தும்  வகையில்,  தமிழக அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப வீரர்களுக்கு  3 சதவீதம்  இட ஒதுக்கீடு செய்த  மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு  நன்றி தெரிவித்தும், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா உளுந்தூர்பேட்டை நகராட்சி மணிக்கூண்டு திடலில் மாணவர்களின் சிலம்பாட்டத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பாளையப்பட்டு பாரம்பரிய  சிலம்பப் பயிற்சி மையத்தின் ஆசான் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மூத்த சிலம்ப ஆசான் கண்ணாயிரம், மற்றும் கராத்தே மாஸ்டர்கள் செங்குட்டுவன், அருளானந்தம், மணி , ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் நிர்வாகி  யத்தீஸ்வரி அமேய ப்ரிய அம்பா,  நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நகர்மன்றத் துணைத் தலைவர் வைத்தியநாதன்,  நகர்மன்ற உறுப்பினர் டேனியல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இறுதியில் நடசாரி சிலம்பம் நடுவர் முருகன் நன்றி உரையாற்றினார், சிவசங்கர் இந்நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கினார்.

இவ்விழாவில் சிலம்பாட்ட மாணவர்களின் சிலம்பாட்டத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்  ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்.