மத்திய அமைச்சரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் மனு

26 August 2022

தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V. ஜெயராமன் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து கடந்த கொரோனா பெருந்தொற்று சமயத்தில் அறிவிக்கப்பட்ட லாக் டவுன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் பணமதிப்பு நிலையின்மை மற்றும் பொருளாதார நிலையின்மை காரணமாகவும், மூலப் பொருட்களின் விலை அதிகமாகவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை குறைவாகவும் உள்ள காரணத்தினால் வங்கிகளுக்கு தங்கள் கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளின் NPA -வகை கடன் தவனை செலுத்த வேண்டிய நாட்களை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும், அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கொண்ட குழுவை அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தி அன்னிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவினை அளித்தார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுல் கந்தசாமி, திரு. சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி