வேப்பனப்பள்ளி வேளாண்மை விரிவாக்க மையத்தின் அவல நிலை......

09 July 2021


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திருக்கு உட்பட்ட அனைத்து சுற்று வட்டார கிராமங்களுக்கும் சேர்ந்து தமிழக அரசின் வேளாண்த்துறை சார்பில் வழங்கப்படும் நலதிட்டங்கள்,விதைகள் மற்றும் வேளாண் சார்ந்த தகவல்கள் பெற வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்பாக வேளாண்மை விரிவாக்க மையம் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடம் தரையிலிருந்து மூன்று அடி உயரம் இருப்பதால் கட்டிடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் அளவிற்கு ஒரு புறம் சாய்வாகவும் மறுபுறம் மூன்று படிகளும் அமைக்க பட்டு இருந்தது. நாளடைவில் சேதமடைந்த படிகள் கட்டிடதிலிருந்து மூன்று அடி தூரம் விலகி இருக்கிறது. இந்த அலுவலகம் சுற்றி குப்பைகளாக சுத்தம் செய்யாமல் காணப்படுகின்றன.இங்கு வரும் விவசாயிகள்,மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம் புதிய கட்டிடத்திருக்கு மாறியாதல் பழைய கட்டிடங்களை சுற்றி புதர் மண்டி கிடக்கின்றது. எனவே அரசு அலுவலகத்திலே இந்த நிலை எனில் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சிகளில் செயல் படுத்தப்படும் தூய்மை பணிகள்,நல திட்டங்களின் நிலைமையும் இதே நிலை என பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு உள்ள வேளாண் அதிகாரிகளுடன் ஒருசில விவசாயிகள் தொடர்பில் வைத்துக் கொண்டு இப்பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விதைகள் வாங்கி தருவதாக வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வேளாண் சார்ந்த திட்டங்கள் நேரடியாக கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் - மகேந்திரன்,
வேப்பனப்பள்ளி.