ஊக்குவிக்க முடியாது லோக்ப்பால் தீர்வுக்கு எதிரான மனுக்களை

16 October 2020

புதுடில்லி : 'அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழங்குகளில், லோக்பால் அமர்வு அளிக்கும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுக்களை, ஊக்குவிக்க முடியாது' என, மூவர் கமிட்டி தெரிவித்துள்ளது.எம்.பி.,க்கள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் தொடர்பான ஊழல்களை விசாரிக்க, லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஊழல் புகார்களை விசாரித்து, லோக்பால் அமர்வு அளிக்கும் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யும் போக்கு, நாளுக்கு நாள் அதிரித்து வருகின்றன. இதையடுத்து, இந்த போக்கை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மூவர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில், லோக்பால் உறுப்பினர்களான நீதிபதிகள், அபிலாஷா குமாரி, டி.கே.ஜெயின், ஐ.பி.கவுதம் ஆகியோர் இடம்பெற்றனர்.இந்த கமிட்டி, கடந்த, 6ல், லோக்பால் தலைவர், பி.கே.கோஷ் முன், அறிக்கை தாக்கல் செய்தது.அதில், ஊழல் வழக்குகளில் லோக்பால் அமர்வு அளிக்கும் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்வதை ஊக்குவிக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.