சித்தர் முறைப்படி குருபூஜை கொண்டாடக்கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்த அர்ஜுன் சம்பத்

13 October 2020

சித்தர் முறைப்படி குருபூஜை கொண்டாடக்கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்த அர்ஜுன் சம்பத் 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அவரது நட்சத்திரதினமான (உத்திரட்டாதி) வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (29/10/2020)  வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இந்து கலாச்சாரப் படி பசும்பொன்னில் உள்ள  திருக்கோயிலில் இ.ம.க சார்பில் நடைபெறுகிறது. 
கோரிக்கை/புகார் மனு

தேதி :12.10.2020
பெறுநர்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை
வழி :அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், வணக்கம்!
 பொருள் : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தமிழ் முறைப்படி அவரது நட்சத்திரதினமான (உத்திரட்டாதி) வரும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று (29/10/2020)  வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இந்து கலாச்சாரப் படி பசும்பொன்னில் உள்ள அவரது  திருக்கோயிலில் இ.ம.க சார்பில் நடைபெறுகிறது. 
தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை ஆங்கிலக் காலண்டர் படி வருடம் தோறும் அவர் உயிர்நீத்த அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக நடத்தி வருகின்றார்கள்.  இது தேவர் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல! நினைவு நாள் கொண்டாடடுவது ஆங்கிலேயர்களின் கலாச்சாரமாகும். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றவே தன் வாழ்நாள் முழுவதும் முத்துராமலிங்கத்தேவர் போராடினார். 

அவரது போராட்டம் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது மட்டுமின்றி சுதந்திர இந்தியாவில் தேசியமும் தெய்வீகமும் வளர வேண்டும் என நாட்டிற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் தன்வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்!
 அவர் இந்து சமய மற்றும் இந்து கலாச்சார மரபுகளை போற்றியதும் தன் வாழ்வில் திருமண பந்தமின்றி பிரம்மச்சரிய விரதம் பூண்டு தலைசிறந்த தவநெறி வாழ்க்கையை மேற்கொண்டு சித்தர்களை வழிபட்டு சித்தர் நெறியை போற்றி அமரரானவர். அவரது நினைவை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் ஆங்கில தேதிபடி அக்டோபர் 30ம் தேதி அன்று குருபூஜை நடத்துவது இந்து கலாச்சார மரபுபடி ஏற்புடையதல்ல! இந்துசமய கலாச்சாரப்படி ஒருவர் உயர்நீத்த நாளுக்குரிய நட்சத்திரம், திதி ஆகியவைகளை அடிப்படையாக வைத்து தான் குருபூஜை நடக்கும்.

தேசிய வாதியாகவும், ஆன்மீக வாதியாகவும் விளங்கிய திரு.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை இந்து கலாச்சாரப்படி அவர் உயிர்நீத்த ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளன்று ஆண்டு தோறும் அரசு சார்பாக பசும்பொன் கிராமத்தில் அவரது சமாதி கோயிலில் குருபூஜை நடத்திட வேண்டும் என நூறு கோடி இந்துக்களின் சார்பாக பணிவுடன் வேண்டுகிறோம்.
இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையானது சார்வரி ஆண்டு ஐப்பசி 15ம் நாள் (29.10.2020) புதன்கிழமையன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்து மக்கள் கட்சித் தலைவர் தமிழ்திரு.அர்ஜுன்சம்பத், தலைமையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இ.ம.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 

இ.ம.க கோரிக்கைகள் :
• தேவர் குருபூஜையை தமிழ்முறையில், திதி, நட்சத்திரப்படி அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

• குரு பூஜை அன்று பசும்பொன் ஆலயத்திற்கு சென்றுவர அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி அளித்து வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும். பாதுகாப்பு, அடிப்படை-சுகாதார, போக்குவரத்து வசதிகள், பக்தர்களுக்கு அன்னதான வசதிகள் தமிழக அரசின் சார்பில் செய்து தர வேண்டும்.

• மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர்பெயர் சூட்டவேண்டும்.மத்திய அரசின் உயரியவிருதான பாரத்ரத்னா விருது வழங்க வேண்டி கோரிக்கை மற்றும் புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. நன்றி!

இப்படிக்கு,
என்றும்தேசப்பணியில்
அர்ஜுன் சம்பத்

#Pasumpon #CM #Arjun_Sampath