மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

22 July 2021


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர் கட்சிகள் அவையில் எழுப்பினர். இதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், எதிர் கட்சி எம்பிக்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதனால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இரண்டு மணிக்கு அவை கூடிய உடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் பெரும் அமளியை ஏற்படுத்தி அவையை நடத்தவிடாமல் முடக்கினர். இதனால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.