ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

08 December 2022

டெல்லியில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் 'எல்லாம் நன்மைக்கே' எனத் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுத்தது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.மத்திய அரசு, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.ஜி20 ஆலோசனை கூட்டம்ஜி20 மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்க, தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதானக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்பியிருந்தது.ஓபிஎஸ் அதிருப்திஅதிமுக தலைமை தொடர்பாக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்பியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக தலைமையாக எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியதால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.அவர் இடைக்கால பொதுச் செயலாளரே இல்லை இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான் தான் நீடிக்கிறேன். சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பதவிக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்திருப்பதை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆலோசனை பாஜகவை நம்பியிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியை அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியதால் அப்செட்டாகி மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால் அந்தக் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பப்படவில்லை. பாஜக மேலிட தலைவர்களை ஓபிஎஸ் தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லையாம். இதனால் கடுமையாக அப்செட் ஆகியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களின் கலக்கத்தை போக்கும் விதமாக சிலரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சொந்த ஊர் கிளம்பிய ஓபிஎஸ் பின்னர், சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்குக் கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம். அங்கும் இன்று தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். மதுரை வந்த ஓபிஎஸ்ஸை அதிமுகவினர் ஏராளமானோர் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
எல்லாம் நன்மைக்கே டெல்லியில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் 'எல்லாம் நன்மைக்கே' எனத் தெரிவித்தார். ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்து வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனக் கூறினார்.
டங் ஸ்லிப் ஜெயலலிதா நினைவு நாளில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அணியினர் அம்மா மறைந்திட்ட இந்நன்னாளில் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் டங்க் ஸ்லிப், வாய்தவறி தவறுதலாக கூறிவிட்டனர் எனத் தெரிவித்தார்.