அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஐ.டி ரெய்டு! – ஓ.பி.எஸ் காட்டம்!

22 July 2021


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக அரசு தயாராகவே உள்ளது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.