3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

23 February 2021

3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில்  உள்ள திருமலை பாளையம் மூலனூரில் எலுகம்வலசு குண்டடம் முத்து கவுண்டன் பாளையம் ஆகிய 3 கிராமங்களில் சுகாதாரத் துறையின் சாா்பில், அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.திருமலை பாளையத்தில் நடைபெற்ற அம்மா சிறிய மருத்துவமனைகள் திறப்பு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி வரவேற்றாா்.

 முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேத்திரன்  தலைமை வகித்து,அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தாா்.

 பின்னா், 20-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகத்தை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ்,பாலகுமாரன்,சந்தானம்,நகர செயலாளர் டி.டி.காமராஜ்,அமராவதி சக்கரை ஆலை தலைவர் சின்னப்பன் (எ) பழனிசாமி,மாவட்ட ஆவின் பால் து.தலைவர் டி.எஸ்.சிவக்குமார், பங்க் மகேஷ்,பைப் சாமிநாதன்,அரசு வழக்கறிஞர் மாணிக்கவாசகம்,ரேவதி குமார் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்...