தொடங்கியது ஒலிம்பிக் 2020 - டோக்கியோ நகர் விழாக்கோலம் பூண்டது!!

23 July 2021


32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. 


ஒலிம்பிக் 2020 கடந்த ஆண்டு குணா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. போட்டிகள் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ளது. கண்கவர் வானவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. சார்பாக 6 தலைவர்களுக்கு அழைப்பு.

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்றனர். மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர். 

இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட இருக்கின்றனர்.அகதிகள் அணி சார்பாக 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்..

இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால் / சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டோக்யோ ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை சோனி லைவ் செயலி வழியாகவோ, சோனி டென் விளையாட்டு தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவோ காணலாம். டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.டோக்யோ நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கூட 1,000 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.