வேண்டாமே தீயபண்புகள்

29 March 2021

மனிதன் வாழ்வில் தவிர்க்க வேண்டிய தீயபண்புகளை மார்க்கம் விளக்குகிறது.களவு, பொய், லஞ்சம், ஊழல், கடத்தல், வட்டி வாங்குதல், உணவுப் பொருட்களை பதுக்குதல், பிறரை நிந்தனை செய்தல், நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றுதல், பெண்களை கேலி, கிண்டல் செய்தல், பிறர் சொத்துக்களை அபகரித்தல், அனாதைகளை விரட்டுதல், ஒப்பந்தத்தை மீறுதல், பிறரை வம்புக்கு இழுத்தல், கொலை செய்தல், பழி துாற்றுதல், கடுஞ்சொல் பேசுதல், மற்றவர்களைத் துன்புறுத்துதல், பெரும்சிரிப்பு, தற்பெருமை, பேராசை, ஆடம்பரம், ஆணவம், பிறரை அடிமைப்படுத்துதல், மற்றவர் விஷயத்தில் தலையிடுதல், அனுமதியின்றி பிறர் பொருளை அனுபவித்தல், செருக்கு, கோபம், பொறுமை இழத்தல், கஞ்சத்தனம், பிறரை அலைக்கழித்தல், அடைக்கலம் கொடுப்பதை தடுத்தல், ஒழுக்கம் தவறுதல், பிறரை புண்படுத்துதல், அசுத்தமாக இருத்தல், உறவு, நட்பு, குடும்பத்தை பிரித்தல், வீண் குழப்பம் செய்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் ஆகியவை கூடாது. வெளித் தோற்றத்தால் மட்டும் மார்க்கத்தை பின்பற்றுவதில் பயனில்லை. நாம் அனைவரும் ஒழுக்கத்தைப் பேணி நல்ல மனிதர்களாக வாழ இறைவன் வழிகாட்டுவானாக.