இரவில் நீங்கள் செய்யும் இந்த பழக்கங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம்…

01 September 2020

சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தும் எடை குறையவில்லையே என கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்வார்கள்.

அந்த வகையில் இரவில் நீங்கள் செய்யும் இந்த பழக்கங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம். 

தாமதமாக உண்பது : இரவு தாமதமாக உண்பது அதிகமாக சாப்பிடத் தூண்டும். அதேபோல் செரிமானமும் பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுக்கு சீக்கிரம் சாப்பிடுவதே நல்லது. 

சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை : இரவு தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டு செல்ஃபோனில் மூழ்கியிருப்பது, படம் பார்ப்பது என தூங்காமல் செய்யும் இந்த பழக்கங்களும் உடல் எடைக்குக் காரணம். 

சாப்பிட்டதும் உறக்கம் : சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கும். எனவே குறைந்தது 20 - 30 நிமிட இடைவேளை இருக்க வேண்டும். அந்த இடைவேளையில் அப்படியே உட்காராமல் நடப்பது போன்ற எளிய பயிற்சி மேற்கொள்ளலாம். இதை வீட்டிற்குள்ளேயும் செய்யலாம். 

இனிப்பு உண்பது : சாப்பிட்ட பின்பு சாக்லெட், பிஸ்கெட் , ஸ்வீட் என ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடைக்கு வழி வகுக்கும். இரவு உணவுக்குப் பின் பசித்தால் பாதாம், முந்திரி போன்ற ஊட்டச்சத்தான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம். 

குளுர்ச்சி : உடல் குளுமைக்கும் செரிமானத்திற்குமே தொடர்பு உண்டு. எனவே இரவு தூங்கும்போது உடலைக் குளுமைப்படுத்துவதாலும் எடை அதிகரிப்பைக் குறைக்கலாம். ஏ.சி இருந்தால் உடல் சூட்டை தனிக்க அளவைக் குறைத்து வையுங்கள்.