லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் இந்த படத்தின் ரீமேக்!

19 April 2021

மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. 
இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர். 

இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.