விழுப்புரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக் குழுவின் சார்பில் தேசிய சட்ட சேவை தினம் கொண்டாடப்பட்டது

09 November 2022

விழுப்புரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக் குழுவின் சார்பில் தேசிய சட்ட சேவை தினம் கொண்டாடப்பட்டது,

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக் குழுவின் சார்பில் தேசிய சட்ட சேவை தினம் இன்று கொண்டாடப்பட்டது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான செல்வி. பூர்ணிமா  தலைமை தாங்கினார் சட்ட சேவை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அனைத்து நிலை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் பூர்ணிமா புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக் குழுவின் நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர்... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் 
மாவட்ட செய்தியாளர் / சப் எடிட்டர்