தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது, கூட்டணிக்குள் பிளவு என ஒரு மாயை கொண்டு வரப்பட்டுள்ளது - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

27 October 2020

சில காலங்களாக தமிழக அரசியலில் இடம்பெறாத அரசியல் கட்சியினர் திட்டமிட்டே வன்முறைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது, கூட்டணிக்குள் பிளவு என ஒரு மாயை கொண்டு வரப்பட்டுள்ளது என மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியத்தார்.

மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்பட்டது. விசிக, திமுக கட்சி நடத்தும் போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்குகிறது.

பாஜக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடுத்து நிறுத்துகிறது. மதுரையில் பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்களை தாக்கவே விசிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தனர். மதுரையில் பாஜக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளை தாக்குதல் செய்ய ஒரு கும்பல் சுற்றி வருகிறது.

அரசியல் ஆதாயம் பெறுவதற்கு பாஜக மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் பிழைப்புக்காக தமிழக பெண்களை தரக்குறைவாக பேசி வருகின்றனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாஜக ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 1 கோடி பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கி உள்ளோம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது, கூட்டணிக்குள் பிளவு என ஒரு மாயை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை செய்தால் நடவடிக்கைகள் எடுக்க தான் செய்வார்கள். தமிழக மக்களின் எந்த உரிமையை பறிக்கப்பட்டு உள்ளது . (உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதில்)" என கூறினார்.