மாணவர்களுக்கான எனது கனவுப் பள்ளி - எனது கனவு நூலகம் கட்டுரைப் போட்டிகள்

08 April 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் (YOUTH & ECO CLUB) சார்பில் நடைபெற்ற 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு *எனது கனவுப் பள்ளி, எனது கனவு நூலகம்* என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் இரா. அருள் ஜோதி மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் ம. சுதீஷ், ஏ. அஸ்வித், பா. சாருலதா, அ. மகேந்திரன், வெ. சீனுவாசன், எஸ். ரூபாஶ்ரீ ஆகியோர் இப்போட்டிகளில் பங்கேற்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆலோசனையின்படி நடைபெற்ற இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு யூத் மற்றும் எக்கோ கிளப் நிதியில் இருந்து *பரிசுகள்* மற்றும் *சான்றிதழ்கள்* வழங்கப்பட உள்ளது.