திருமதி இலங்கை பட்டம் வென்றவரிடமிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே பறிக்கப்பட்டது

07 April 2021

2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி சில்வா என்பவருக்கு வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை. புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலின் பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.

கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், புஷ்பிகா விவாகரத்து செய்யவில்லை என்று அமைப்பாளர்கள் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டனர். திருமதி இலங்கை உலகின் தேசிய இயக்குனர் சந்திமல் ஜெயசிங்க பிபிசியிடம், கிரீடம் புஷ்பிகாவுக்கு திருப்பித் தரப்படும் என்று கூறினார்.

"கரோலின் ஜூரி மேடையில் எப்படி நடந்துகொண்டார் என்பது ஒரு அவமானம் மற்றும் திருமதி உலக அமைப்பு ஏற்கனவே இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது" என்று ஜெய்சிங்கே கூறினார்.

புஷ்பிகா தனது பட்டத்தை   தங்கள் குழந்தைகளை தனியாக வளர்க்க துன்பப்படுகிற ஒற்றை தாய்மார்களுக்கு  அர்ப்பணித்தார். இலங்கையில் இன்று என்னைப் போன்ற ஒற்றை அம்மாக்கள் நிறைய உள்ளனர். இந்த கிரீடம் அந்த பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என கூறினார்.