புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் பிரதி - "ஜூன் 18-ம் தேதி ஏலம்"

12 June 2021

புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின், பிரதி ஓவியம் ஏலமிடப்பட உள்ளதாக பிரான்ஸை சேர்ந்த ஏல நிறுவனம் அறிவித்து உள்ளது. மோனலிசா ஓவியத்தைப்போல் காணப்படும் இந்த ஓவியம், 17-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் வரையப்பட்டதாக தெரிகிறது. ஹெக்கிங் மோனலிசா என அழைக்கப்படும் இந்த ஓவியம் வருகிற 18-ம் தேதி ஏலமிடப்பட உள்ள நிலையில், பல கோடி ரூபாய்க்கு இந்த ஓவியம் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.