தென்காசி மாவட்டம் சிவகிரியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார்.

09 June 2021


தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி வட்டாரத்தில் சுமார் 8500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு சாகுபடி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சதன் திருமலைக்குமார் எம்எல்ஏவிடம் சிவகிரி வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை கட்டுபடியான விலைக்கு விற்பதற்கு இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் விரைந்து அமைக்க வேண்டும் என சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, தென்காசி கலெக்டரிடம் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று கலெக்டர் சமீரன், மாவட்ட வழங்கல் அலுவலர், நெல்லை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு சிவகிரி வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டார்.அதன்படி சிவகிரியில் நேற்று நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதை சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் தவமுனி, வேளாண்மை துணை இயக்குநர் நல்லமுத்து ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் சிவமுருகன், வைத்திலிங்கம் அரவிந்த், திமுக ஒன்றிய செயலாளர் வாசு., வடக்கு பொன் முத்தையாபாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நல்லசிவன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பூமிநாதன் மதிமுக நிர்வாகிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.