திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

23 July 2021


திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தனியார்துறையில் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணிநியமன ஆணையினையும், தற்பொழுது பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிதுறையின் பயிற்சி கையேட்டினையும் வழங்கினார். 

இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவராவ்,மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழக  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு வேண்டி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினையும், தற்பொழுது பயிற்சிபெற்றுவரும் மாணவ, மாணவிகளுக்;கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இலவச பயிற்சி கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார். 

இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சோம.அழகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். 

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.