இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்தார் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

30 October 2020

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.


அதில் அவர், "முகமது நபி அவர்களின் பிறந்த நாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகமது நபி அவர்கள், அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அளித்து உலகத்தை மனித நேயத்தின் பாதையில் கொண்டு சென்றார்” என்று கூறி உள்ளார்.

"புனித குரானில் சொல்லப்பட்ட நபிகள் நாயகத்தின் போதனைகள்படி நாம் அனைவரும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் பாடுபடுவோம்” எனவும் கூறி இருக்கிறார்.