உளுந்தூர்பேட்டையில் மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில் மனிதம் விருது வழங்கும் விழா.

05 November 2022

உளுந்தூர்பேட்டையில் மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில் மனிதம் விருது வழங்கும் விழா.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மனிதம் காப்போம் அமைப்பு மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மனிதம் காப்போம் குழுவில் சிறப்பாக பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு இரத்ததானம் செய்த தன்னார்வலர்களை கௌரவிக்கும் வகையில், மாபெரும் மனிதம்  விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவினை உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் அம்பாள்  குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர். அசோக்குமார் முன்னிலை வகித்தார், புதுச்சேரி புவி பவுண்டேஷன் தேசிய இரத்ததான ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், அறம் அறக்கட்டளை நிஷா, அன்னை காருண்யா அறக்கட்டளை சௌபாக்கியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் தலைமையேற்று விருதுகளை வழங்கினார்.

இந்த ரத்ததான முகாமில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையின்  ரத்த வங்கி மருத்துவர் சதா வெங்கடேஷ், செவிலியர் லதா,  ஐ.சி.டி.சி ஆலோசகர் ராஜன்,  ஆய்வக நுட்புனர் சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 30 தன்னார்வலர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.

மேலும் இவ்விழாவில் தொடர்ந்து குருதிக்கொடை வழங்கிக் கொண்டிருக்கும் 90 தன்னார்வலர்களுக்கு மனிதம் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை விஜய்செல்வா சந்துரு , அஜய்குமார், முத்துக்குமார், கோவிந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். 

கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட மனிதம் காப்போம் குழு தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் செங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் குணசேகரன்  பண்ருட்டி பலா மரக்கன்றுகளை வழங்கினார்... 

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் மற்றும் சப் எடிட்டர்