தடுப்பூசி திருவிழா மூலம் நாள்தோறும் 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு - மதுரை மாநகராட்சி ஆணையாளர்

14 April 2021

மதுரை மாநகராட்சி மற்றும் திருமுருகபக்த சபை சார்பில் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கி வரும் 16ஆம் தேதி வரை 3நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் விசாகன் தொடங்கிவைத்தார்.

தடுப்பூசி விழாவில் 45வயதிற்கு மேற்பட்டோருக்கும் , சுகாதாரபணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் ஆதார்அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவுசெய்த பின்னர் தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் மேலும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த முகாமில் சுகாதாரத்துறை, மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தி மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேட்டியளித்தபோது 

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. எனவும், 14,15,16ஆகிய 3நாட்கள் நடைபெறும் .

இந்த நிகழ்ச்சியில் நாளொன்றுக்கு 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் போதுமான அளவிற்கு தடுப்பூசி இருப்பு உள்ளது பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்றார்