மதுரையை  தடகள வீராங்கனை ரேவதிக்கு ரயில்வே பணியில் பதவி உயர்வு.

09 September 2021

சக்கிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரேவதி வீரமணி தற்போது நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், ரேவதி வீரமணியை பாராட்டும் விதமாக அவருக்கு ரயில்வே துறையில் ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 

தற்போது வழங்கப்பட்டுள்ள பணி அவர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உதவிகரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பதவி உயர்வு பெற்ற ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.