நல்லதைச் செய்வோம்

08 April 2021

* ஒழுக்கமுள்ளவனாக இரு! மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு! மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.
* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்!
* நாவு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும். நாவு நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.
* குர்ஆனை கற்றுக் கொடுப்பதை கட்டாயமாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை முதல் முதலாக குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களின் பாவங்கள் உடனே மன்னிக்கப்படுகின்றன.
* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர்! இல்லையேல் அதை விட்டு விடும்!
- நபிகள் நாயகம்