இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 65% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை...

23 July 2021


18 வயதுக்கு மேற்பட்டோரில் 65% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை கடந்த ஜனவரி 16 ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அதாவது 94 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 65% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.