நடிகை மீது தேச துரோக வழக்கு - லட்சதீவு போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல்!!

21 July 2021


நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவு போலீசார் கேரளா உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.லட்சத் தீவில் கெடுபிடி சட்டங்கள் தொடர்பாக நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஆயிஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு பதிவு செய்த பின்னர் தனது மொபைல் போனில் இருந்த தகவல்களை அழித்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.