திமுகவில் பதவி பெற குண்டாஸ் பெற்றவராக இருக்க வேண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

10 September 2021

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவில் பதவி பெற குண்டாஸ் பெற்றவராக இருக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

 மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பதவிகள் விற்பனைக்கு உள்ளது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதில் ஒவ்வொரு பதவிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிக்கான தகுதியில் குண்டாஸ்  பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு 5 லட்ச ரூபாயும், மாவட்ட பகுதி செயலாளர் 3  லட்ச ரூபாயும்,  மாநகர் வடக்கு மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்ச ரூபாயும்,  வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு இரண்டரை லட்ச ரூபாய் கட்டவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் இருந்தால் மட்டுமே இங்கு பதவி உண்டு, அவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, கட்சியில் உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை பணம் இருந்தால் கட்டாயம் பதவி கிடைக்கும் என வேதனையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படிக்கு 
மதுரை மாநகர் மாவட்ட திமுகவின் உண்மை தொண்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆளுங்கட்சியாக திமுக உள்ளதால் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.  கட்சிக்கு உழைத்தவர் தவிர்து,  தற்போது பணம் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதால் இது போன்ற கட்சியினர் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.