கூடலூர் அருகே தேவர் சோலை பகுதியில் மூன்று பசு மாடுகளை புலி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

23 July 2021

கூடலூர் அருகே தேவர் சோலை பகுதியில் மூன்று பசு மாடுகளை புலி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை தேவன் எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அருகே கடந்த இரண்டு நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்பட்டு வந்த நிலையில் நாராயணன் மற்றும் சுப்பிரமணி என்பவரின் பசுமாடுகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி அடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

கடந்த இரண்டு நாட்களாக மூன்று கால்நடைகளை அடித்துக் கொன்ற புலி குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதால் கிராம மக்கள் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

மேலும் வனத்துறையினர் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில் கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கால்நடைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடையே தெரிவித்துள்ளனர்.

புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

(கோவை ஜான்)