திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு - சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்த கூட்டம்

10 June 2021

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று ஜூன் 10 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தூய்மைப் பணியாளர்கள் 1500 பேருக்கு முட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஆகியோர் கலந்து கொண்டு முட்டை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துவங்கி வைத்ததற்கு பின்பு தூய்மைப் பணியாளர்கள் முட்டை வாங்குவதற்கு முண்டியடித்தனர் அப்பொழுது சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாமல் கூட்டம் அலைமோதியது இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.