கண்துடைப்பிற்காக நடத்தபடுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ?

15 December 2021

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாக விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் இதற்கு முன்னராக எஸ்.பி வேலுமணி,கே.சி.வீரமணி.எம் ஆர் விஜயபாஸ்கர்,சி.விஜயபாஸ்கர் என பல முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
ஆனால் இது குறித்து ஒரு வெளிப்படையான தகவல் தெரிவிக்கப்பட்டதா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் அடிப்படையில் தான் எஸ்.பி வேலுமணியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.கிட்ட தட்ட ஊழல் நடந்ததற்கு அனைத்து முகாந்திரம் இருந்தும் இதுநாள் வரை எஸ்.பி.வேலுமணி மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை.இதற்கு காரணம் என்ன ? ஊழல் புரிந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று கூறிய முதல்வர் ஏன் மவுனம் காக்கிறார். இது இப்போது மட்டும் அல்ல ஈசா யோகா மையம் யானை செல்லும் பாதையை ஆக்கிரமித்து தான் பாதைகளை அமைத்துள்ளது என்ற அனைத்து முகாந்திரம் இருந்தும், அப்படி எதுவும் இல்லை என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.இது போன்ற நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன ?.


வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டைரத்து செய்த போது செய்வதறியாது திகைத்து கொண்டிருந்த பாமகவிற்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. காரணம் இந்த காரணத்தை முன்னிறுத்தி தான் வாக்குகளைகேட்டார் ராமதாஸ் தற்போது இது அவர் பக்கமே திரும்ப மக்களும் கேள்வி கேட்க , அப்போது கிடைத்தது தான் ஜெய்பீம் அக்கினி கலசம் பிரச்சனை ஊதி பெருசாக்கி உள் இட ஒதுக்கீட்டு பிரச்சனையை மறக்கடிக்க செய்தனர்.
அதே போல தான் நேற்றைய தினம் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துசெய்து உத்தரவிட்டது. தற்போது அந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். மேலும் இது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வரும் இந்த நிலையில் தங்களை தற்காத்து கொள்ள உடனடியாக அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.
எஸ்.பி வேலுமணியிடம்சோதனை நடந்த போதே தங்கமணி வீட்டிலும் சோதனைநடைபெற்றிருக்க வேண்டும். காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  வலது மற்றும் இடது கரமாக திகழ்ந்தவர்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கட்சி மற்றும் ஆட்சி ரீதியாக பெரும் நட்புணர்வை தெரிவித்து வந்தவர்கள்.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கட்சி மற்றும் ஆட்சியின் வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்.
இப்படி பல விஷயங்கள் அறிந்திருந்தும் வேலுமணி வீட்டில் சோதனை நடந்த போதே தங்கமணி சுதாரித்து இருக்க மாட்டாரா ?.அப்படி என்றால், எதனை மறைக்க இந்த லஞ்ச ஒழிப்புத்துறை நாடகம்.