வருமான வரி ‌‌கட்டமுடியவில்லை - நடிகை கங்கனா

10 June 2021

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் கொரொனா கால ஊரடங்கில் வருமான வரி கட்டமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஆவார்.

ஆனால், அடிக்கடி சில சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி விவாதத்திற்கு உள்ளாவார்.

இந்நிலையில், கடந்தாண்டு கொரொனா இந்தியாவில் படையெடுத்ததால் அனைத்துத் தொழில்களும் பெரும் வீழ்ச்ச்யைச் சந்தித்தது. அனைவரின் வாழ்வாதாரமும் பாதித்தது.

எனவே கடந்த ஆண்டு வேலை வாய்ப்பில்லை என்பதால் கடந்தாண்டுக்கான வருமான வரியை என்னால் கட்டமுடியவில்லை என்றும் இதற்கு அரசு தனக்கு வட்டி விதித்துள்ளதாகவும் இதிலிருந்து மீண்டு வருவோம் என நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.