குழந்தைகள் பாதுகாப்பு குழுவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்- மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ்

23 June 2021


6 வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் குறையும் என மதுரையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் பேட்டி.

மதுரை அருகே ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளின் நிலை குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் ஆய்வு நடத்தினார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி,சுகாதாரம் மற்றும் குடியுரிமை, பிறப்பு சான்றிதழ் பெறுவது குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் கூறும்போது

கிராம ஒன்றியம், மாவட்டம், நகராட்சி,மாநகர், உள்ளிட்ட 6 வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் குறையும் 

சேவை உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்படும் என ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது 

சேவை உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டால் குழந்தைகளுக்கு
மிகுந்த நன்மைகள் கிடைக்கும் 

பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் எளிமையாக பெற பயனுள்ளதாக இருக்கும் 

சிறு வயதில் விபத்தால் பெற்றோரை இழந்துள்ள சிறார்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற்று தரும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் 

அகதிகள் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், குடியுரிமை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.