மாணவர்களுக்கான மாபெரும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நீதிபதிகள் பங்கேற்பு...

10 September 2022

மாணவர்களுக்கான மாபெரும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நீதிபதிகள் பங்கேற்பு... 

மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் விழுப்புரம்  அறிஞர் அண்ணா கலை மற்றும்  அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான மாபெரும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகாஷ்   வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சரவணகுமார் தலைமை உரையாற்றினார்,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் (பொறுப்பு) / முதன்மை நீதிபதி  பி.தேன்மொழி மாணவர்களுக்கு பல்வேறு சட்ட கருத்துகளையும், விளக்கங்களையும் அளித்தார் மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடும்ப வன்முறைகள் சம்பந்தமாக பல்வேறு விளக்கங்கள், போஸ்கோ சம்பந்தமான பல்வேறு தகவல்களை எடுத்து கூறினார் மாணவ செல்வங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபத்ரா  பங்கேற்று மோட்டார் வாகன விபத்து, ஒழுக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் போன்ற பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயலாளர் முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியை ராஜ்குமார் இளநிலை நிர்வாக உதவியாளர் தொகுத்து வழங்கினார்,  இந்த மாபெரும் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தன்னார்வத் தொண்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் 
துணை ஆசிரியர்