இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்- ஆனால் இது நடக்காமல் இருக்க வேண்டும்!

15 April 2021

நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படாவிட்டால் வரும் ஜுன் காலாண்டில் நிறுவனங்களில் ஆட்கள் பணியமர்த்தப்படுவது 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் சரிந்து மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். பலர் வேலையிழந்த நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் இன்றி பட்டதாரிகள், பொதுமக்கள் தவித்தனர்.

தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகையில், மீண்டும் கொரோனாவின் தாக்கமானது இதுவரை இல்லாத அளவுக்கு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாவிட்டால் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் ஆன்லைன் வர்த்தகம், ஐ.டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளில் ஆட்கள் பணியமர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும்  7 சதவீதம் வரை வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.